எல்லா தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் இயங்கும் -ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு

எல்லா தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் இயங்கும் -ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு

எல்லா தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் இயங்க முடிவு செய்துள்ளதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 30-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.கொரோனாவின்  வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ்  உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய முடிவு எடுத்துள்ளார் . ஆந்திராவில் உள்ள  தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலத்தில் 23 பேருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Join our channel google news Youtube