அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் -கே.எஸ்.அழகிரி

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

எனவே கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கைகள் எடுக்க காணெலி மூலம் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில் ,கொரோனா நோய் தடுப்பு முயற்சிகளில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்வதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி  அவர்கள் உடனடியாக கூட்டவேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை மூலம் கூறியிருப்பதை வரவேற்று வலியுறுத்த விரும்புகிறேன்,மேலும் காணொளி காட்சி மூலமாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.