அனைத்து கட்சி கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் - ஸ்டாலின்

அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் என்று திமுகதலைவர் ஸ்டாலின்

By venu | Published: Apr 01, 2020 10:57 AM

அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் என்று திமுகதலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

எனவே கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கைகள் எடுக்க காணெலி மூலம் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் முதலமைச்சர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். முதலமைச்சர் பழனிசாமி  அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc