அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு….!!! முதல்வரின் பெயரில் கல்வெட்டு வைக்க எதிர்ப்பு…!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில், முதல்வரின் பெயரில் கல்வெட்டு வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு சோழன்வந்தான் பகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் அவர்கள் வருகை தந்தார்.

பொதுமக்கள் எதிர்ப்பு :

இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரை காளைகள் வெளிவரும் வாடிவாசலில் கல்வெட்டில் பொறிக்க வேண்டுமென்று பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் சட்டமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் வரவழைக்கப்பட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்ந்ததால், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment