உலகமே அன்னார்ந்து பார்க்கும்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..உற்சாகத்துடன் தொடங்கியது

  • உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
  • அலங்கநல்லூரில் சீறிப்பாயக் காத்திருக்கும் 700 காளைகள்  மற்றும்  900 மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900 மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கி நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்தது.இந்நிலையில் உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

Related image

உலகப்புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவினையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அதன பின்னரே  போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்கள்.

Related image

போட்டி நடைபெறும் வாடிவாசல் பகுதி முதல் ஜல்லிக்கட்டு எல்லைப் பகுதி வரை தென்னை நார்கள்  போடப்பட்டு உள்ளது.ஜல்லிக்கட்டினை கண்டு களிக்க அங்கு வந்துள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் அமர தனித்தனி கேலரிகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Related image

மேலும் பார்வையாளர்கள் பகுதிக்குள் சீறிப்பாய்ந்து வருகின்ற காளைகள் சென்றுவிடாத படி அதனை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. போட்டியில் காயம் அடைபவர்களுக்கு  தேவையான முதற்கட்ட முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப் பெறும் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha