ஒரே ஒரு பேட்டியில் பாலிவுட் சினிமாவையே அதிர வைத்துவிட்டார் 2.O வில்லன் அக்ஷய் குமார்!

பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருந்தாலும் புதுமுக அல்லது

By manikandan | Published: Dec 05, 2019 06:38 AM

  • பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருந்தாலும் புதுமுக அல்லது இளம் இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார் அக்ஷய் குமார்
  • பேட்டி ஒன்றில் பாலிவுட் சினிமா பெரிய இயக்குனர்களுக்கு கான்களும், கபூர்களுமே கண்களுக்கு தெரிவார்கள் என்று தெரிவித்துள்ளார். 
அக்ஷய் குமார் நடிப்பில் அடுத்ததாக குட் நியூஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்ரைலர் காமெடியாக உள்ளது. மருத்துவமனையில் நடக்கும் சிறு குழப்பம் அக்ஷய் குமார் குடும்பத்தை எப்படி ரணகளமாக்குகிறது என ஜாலியாக இருக்கிறது. இந்த படத்துக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவரிடம் முன்னணி நடிகராக இருந்தும் ஏன் இளம் இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறீர்கள். பெரிய இயக்குனர்கள் படத்தில் நீங்கள் நடிப்பதிலையே என கேட்கப்பட்டது. அப்போது அவர் பாலிவுட் சினிமா பெரிய இயக்குனர்களுக்கு கான்களும், கபூர்களுமே கண்களுக்கு தெரிவார்கள். என்னை போல குமார்களெல்லாம் கண்களுக்கு தெரிய மாட்டோம் என தெரிவித்தார். இவரது இந்த கருத்து தற்போது மிக வைரலாகி வருகிறது. கான்கள் என்றால் அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான், சயீப் அலிகான், கபூர் என்றால் ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர், ஆகிய நடிகர்கள் உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc