அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்.!

அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2015ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

சிரஞ்சீவி  நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தை ராம் சரண் தயாரித்து கொரட்டால சிவா இயக்குகிறார். மேலும் சிரஞ்சீவி இந்த படத்தில் இரண்டு அவதாரங்களில் நடிக்க இருக்கிறார். மேலும் இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். தற்போது அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அஜித்தின் பில்லா படத்தின் ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் இயக்குவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த ஏழு வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில், பில்லா படத்தை வெற்றிகரமாக இயக்கிய காரணத்தினால் சிரஞ்சீவி அவரை அழைத்து  வேதாளம் படத்தை இயக்க கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.