37 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு நடனமாடிய அஜித் பட நடிகை.!

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கனிகா,

By ragi | Published: May 04, 2020 05:50 PM

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கனிகா, மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து  தமிழில்  2002ல் வெளியான பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் அஜித்தின் வரலாறு என்ற படத்திலும் நடித்து பிரபலமானார். மேலும் ஓ காதல் கண்மணி என்ற படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.  அதனையடுத்து ஷாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை கனிகா ஜே.எல்.ஓ சூப்பர் பவுல் சேலன்ஜை செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த வருட தொடக்கத்தில் சென்சேஷ்னல் பாடகரான ஜெனிபர் லோபஸின் சூப்பர் பவுல் அரைமணி நடிப்பு இப்போது சமூக வலைத் தளங்களில் மிகவும் சவாலான விஷயமாக மாறியுள்ளது. ஆம் இந்த ஊரடங்கில் பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், சாகச வீடியோ மூலம் வைரலாகி வரும் சேலன்ஜ்களை செய்தும  வெளியிட்டும்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகை கனிகா  JLo சூப்பர் பவுல் சேலன்ஜை செய்த டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது வளைவு நெளிவுகளை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர்.இந்த 37வயதிலும் இவ்வளவு அழகாக ஆடுகிறாரே என்றும், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போலயே என்றும் கமென்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ  சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Tried some Tik tok ing with the #jlosuperbowlchallenge #tiktokindia ❤

A post shared by Kaniha (@kaniha_official) on

Step2: Place in ads Display sections

unicc