அஜித் ரசிகர்களின் அளவில்லாத கொண்டாட்டம்! ட்வீட்டரில் ட்ரெண்டாகும் #என் தல அத்திவரதரு!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நேர்கொண்டப்பார்வை படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீசாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர். மேலும், அஜித் ரசிகர்களின்  கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் களைகட்டுகிறது.

இந்நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் ஒரு பேட்டியில், 40 ஆண்டுக்கு ஒரு முறை தான் அத்திவரதர் வருவாரு. ஆன எங்க தல அத்திவரதரு ஒவ்வொரு வருஷமும் வருவாரு என்று கூறியுள்ளார். இதனையடுத்து, ட்வீட்டரில் #என்தல அத்திவரதரு என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.