இவர் தல ரசிகர் இல்லை தல வெறியர்! சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பிறப்பு சான்று!

தல அஜித்திற்கு தமிழகத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் சொல்லி

By manikandan | Published: Oct 10, 2019 05:11 PM

தல அஜித்திற்கு தமிழகத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவர் திரையை தவிர வேறு எந்த மீடியா வெளிச்சத்திலும் படாமல் இருந்து வருகிறார். மேலும், தனது குடும்பத்தின் மீதும் மீடியா வெளிச்சம் படாமல் பார்த்து வருகிறார்.   இவர் தன் வேலை நடிப்பது மட்டுமே, அதனை செய்கிறேன். என கூறி, தனது ரசிகர் மன்றங்களை எப்போதோ கலைத்துவிட்டார். இருந்தாலும் தல அஜித் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு. வருகிறது. மற்ற சமூக வலைத்தளத்தில் இவர் இல்லை என்றாலும், இவரை பற்றிய ஒரு செய்தி வந்தாலும் ட்ரெனட் ஆகி விடுகிறது. அப்படி ஒரு தீவிர ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளார். மதுரையை சேர்ந்த அப்படி ஒரு தீவிர ரசிகர் தனது பையனுக்கு தல அஜித் என்றே பெயர் வைத்துவிட்டார். மதுரையை சேர்ந்த மதுரைவீரன் - ஜோதிலட்சுமி தம்பதிக்கு 2013ஆம் ஆண்டு ஜூன் 7இல் பிறந்தவர் தான் இந்த தல அஜித்! இந்த மதுரை தல அஜித்தின் பிறப்பு சான்றும், பள்ளி அடையாள அட்டையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc