அஜித் பவார் நீக்கம் - தேசியவாத காங்கிரஸ் அதிரடி

அஜித் பவார் நீக்கம் - தேசியவாத காங்கிரஸ் அதிரடி

தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திடீர் திருப்பமாக இன்று  மகாராஷ்டிரா அரசியலில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக  பதவி ஏற்ற நிலையில் அவருடன் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பாஜகவிற்கு ஆதரவு அளித்த அஜித் பவரை சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில்  இருந்து நீக்கம் செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.