மீண்டும் மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சராக அஜித் பவார்.?

மீண்டும் மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சராக அஜித் பவார்.?

  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்தார்.
  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். 3 கட்சிகளின் இருந்து தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி  நிலையில் நடைபெறவில்லை.  இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்தார்.இருவரும் 1 மணி நேரத்திற்கும் மேல்  ஆலோசனை நடத்தினர். இவர்கள் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேசியதாகவும் வருகின்ற  30-ம் தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர் .மேலும் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் பாஜக தலைமையில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , அஜித் முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Latest Posts

#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை - கார்த்தி சிதம்பரம்!
1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!