ரீசார்ச் செய்தால் 2 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு இலவசம்... அதிரவிட்ட அந்த தொலைதொடர்பு நிறுவனம்... ஆச்சரியத்தில் மக்கள்...

2 lakhs worth of life insurance is free if you do the research ...

  • காப்பீடு திட்டத்துடன் புதிய பிரீபெயிடு திட்டம்.
  • வித்தியாசமான சலுகையை அளிக்கும் அந்த நிறுவனம்.
தொலைதொடர்பு சேவை துறையில் ஜியோ நிறுவனத்தை சந்தையில் சமாளிக்க முடியாமல் அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் தினறி வருகிற சூழலில் தங்கள் நிலையை உறுதிபடுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்திடவும், தங்கள் நிறுவனத்தின் சேவையை உறுதிசெய்துகொளவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில்,  ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டத்தை அறிவித்துளது. இதன் படி, ஏர்டெல் நிறுவனம் ரூ. 179 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் வழக்கமான அன்லிமிட்டெட் பலன்களுடன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பாரதி ஆக்சா உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது என்ற செய்திதான் மேலும் சிறப்பு.   Related image இதுமட்டுமல்லாமல் இந்த புதிய சலுகையில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இதில்,மேலும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் பிரீமியம் சந்தா, விண்க் மியூசிக் போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகளையும்  இதில் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பும் ஏற்கனவே இதேபோன்ற பலன்கள் நிறைந்த சலுகையினை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 149 விலையில் வழங்கி வருகிறது. ஆனால்  இந்த சலுகையில் உயிர் காப்பீடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.