போர் விமானங்களோடு எல்லையில் விமானப்படை தளபதி ஆய்வு!!

இந்திய ம்ற்றும் சீன எல்லையில்  தற்போது பதற்றம் நிலவி வருவதை அடுத்து காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர்  இடங்களுக்கு இந்திய விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா ரகசியமாக வந்து ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மற்றும் சீன எல்லையில் காஷ்மீரின் லடாக் அருகே தான் தற்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ள கால்வான்(கல்வான்) பள்ளத்தாக்கு பகுதி உள்ளது.இப்பகுதியானது இந்திய நாட்டின் எல்லைக்கு உட்பட்டு இருந்து வருகிறது.தற்போது அதனை திடீரென்று  பள்ளத்தாக்கிற்கு பாத்தியப்பட்டவர்கள் நாங்கள் தான் என்று குதித்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது சீனா. எல்லைக்கோட்டை மீறியது மட்டுமின்றி பகுதியை ஆக்கிரமிப்பு  செய்யும் எண்ணத்தில் தன் அதிகாரத்தினை எல்லையில்  கட்டவிழ்த்து வருகின்றது.இதனால் அங்கு ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக சமீபத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் சீன ராணுவத்தினர் கொடூரமாக தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 76 வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில். அத்துமீறிய சீன தரப்பில் 43 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து எல்லையில் கடும் பதற்றமானது நிலவி வருகிறது.

இதற்கிடையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய விமானப் படை தளபதி பதவுரியா கடந்த இரண்டு நாட்களாகவே காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர் பகுதிக்கு ரகசியமாக வந்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்  வெளியாகி உள்ளது.

3 Indian soldiers killed in Ladakh: Rajnath Singh reviews ...லே மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் ஏற்கனவே இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கியுள்ளது.மேலும் அங்கு கண்காணிப்பு பணியும் அதிதீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் தரப்பில் இந்திய – சீன எல்லையில் விமானப் படையினரை தயார் நிலையில் வைப்பதற்காக விமானப்படை தளபதி இவ்ஆய்வினை நடத்தியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஒருபுறம் சீனா என்றால் மறுபுறம் காஷ்மீரில் இந்தியா – பாக். எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு சீனா காரணமாக இருக்குமா? என்று கேள்வி எழுந்த  வந்த நிலையில்  இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இந்திய – சீன எல்லையில் நிலவும் பதற்றத்துக்கும்.,இந்தியா – பாக். எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதும் நம் ராணுவம் பதிலடி கொடுத்ததும் அவர்கள் பின்வாங்கிச் செல்வதும் வழக்கமாக நடப்பது தான் என்று ராணுவ வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

author avatar
kavitha