"தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமையும்" தமிழிசை கருத்து..!!

தமிழகத்தில் தற்போதுதான் மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க

By Fahad | Published: Apr 05 2020 12:19 AM

தமிழகத்தில் தற்போதுதான் மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை ரூ 1500 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டம் அறிவித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலே இன்னும் எவ்வித முயற்சியும் செய்யாமல் இருக்கிறது.இந்நிலையில் மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க  இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடும் செய்யவில்லை , டெண்டரும் விடவில்லை என்று தெரிவித்துள்ளது கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். Image result for AIIMS MADURAI இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தனது டிவீட்டர் பக்கத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் என்று பதிவிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் சொல்லும் போது ,காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60ஆண்டுகளில் வந்தது 9 இடங்களில் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை வந்தது .ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி என்று பாஜக மாநில தலைவர் தெரிவித்துள்ளார். DINASUVADU 

Related Posts