அதிமுக நாள்களும், மோடி ஆட்சியின் நாள்களும் எண்ணப்படுகிறது – எம்.எல்.ஏ. கீதாஜீவன்

அதிமுக நாள்களும், மோடி ஆட்சியின் நாள்களும் எண்ணப்படுகிறது – எம்.எல்.ஏ. கீதாஜீவன்

 

கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் சிலர் முதல்வராக வேண்டும் என்று கட்சி தொடங்குகின்றனர். கொள்கை கோட்பாடு கிடையாது, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை அதிமுகவில் தான் வெற்றிடம் உள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்து பிரதமர் மோடி ஆட்டுவிப்பதால் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக, அடிமைகளாக செயல்படுகின்றனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டுள்ளது, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, தமிழக பட்ஜெட்டில் எவ்வித திட்டங்களும் இல்லை, கடன் கூடியுள்ளது, வருவாய் பற்றாக்குறை கூடியுள்ளது, விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது.மோடி ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது, எம்.எல்.ஏ தேர்தலை எதிர்பார்த்த நமக்கு எம்.பி.தேர்தலும் வரவுள்ளது. தமிழக கஜனா காலியாகி விட்டது.லேப்டாப், சைக்கிள், திருமணஉதவி தொகை என எதுவும் வழங்கப்படவில்லை, தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.டி வரிக்கு பின்பு சிறு,குறு தொழில்கள் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கார்பேரேட் நிறுவனங்களுக்கான அரசாக உள்ளது. சொத்து வரி என்ற பெயரில் மக்களின் சுமையை மாநில அரசு அதிகாரித்துள்ளது. கோவில்பட்டி நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க திமுக ஆட்சியில் இருக்கும் போது 2வது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த அரசு பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை, கோவில்பட்டி நகரில் சாலை விரிவாக்க பணிகள் வரவேற்க்கூடியது தான், அதே நேரத்தில் குழப்பம் இல்லமால், வணிகர்கள், பொது மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவர்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த வேண்டும், அதிமுக நாள்களும், மோடி ஆட்சியின் நாள்களும் எண்ணப்படுகிறது. விரைவில் இரண்டுக்கும் தேர்தல் வரவுள்ளது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரால் பண்படுத்தப்பட்ட மண் இங்கு பாஜகவின் எண்ணம் பலிக்காது, வரும் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும், மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *