அதிமுக -பாஜக : கூட்டணியின் நிலை என்ன ? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

அதிமுக -பாஜக : கூட்டணியின் நிலை என்ன ? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
  • உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவிடம் பேசியுள்ளோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது.ஆனால் மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை.இதன் பின்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட்டணி தொடர்ந்தது.ஆனால் தற்போது  ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதற்காக கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது. இதனிடையே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவிடம் பேசியுள்ளோம். இன்றைக்குள் முடிவு எடுக்கப்படும் .உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக நீதிமன்றத்தை அணுகியிருப்பது அச்சத்தின் அடிப்படையில் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Latest Posts

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!
காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும் - தினேஷ் குண்டு ராவ்
60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!
சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!
செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!