வேளாண் மசோதா நிறைவேற்றம் -திமுக வெளிநடப்பு

வேளாண் மண்டல சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நிறைவேற்றம் செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,விவசாயிகள் அரசு என்பதன் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவை கொண்டு வந்திருக்கிறோம். இதனை கூட அரசியாலாக்கி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது வருத்தமளிக்கிறது. திமுக ஆதரவளிக்காவிட்டாலும் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம் என்று பேசினார்.