மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்றமாதம் தொடங்கி பல இடங்களில் கனமழை கொட்டி

By manikandan | Published: Nov 12, 2019 10:41 AM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்றமாதம் தொடங்கி பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனை அடுத்து வங்க கடல் மற்றும் அரபி கடலில் 3 விதமான புயல்கள் உருவாகின. அவை மற்ற இடங்களுக்கு நகர்ந்து சென்றதால் மழையளவு குறைவாக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் மிதமான மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து வெப்ப சலனம் காரணமாக வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc