40 ஆண்டுகளுக்குப் பின்பு சக்கர நாற்காலியில் மாற்றுதிறனாளிகள் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அனுமதி…!!

  • மீனாட்சியம்மன் கோவிலின் பாதுகாப்பு கருதி மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை .
  • தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி  40 ஆண்டுகளுக்குப் பின்பு மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றுத்திறனாளி பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயில் வரை தனது சக்கர நாற்காலியுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி மாற்றுத்திறனாளிகள் தங்களை கோவிலின் நுழைவு வாயில் வரை அனுமதிக்கலாம் என விவரங்களை காவல்துறையினரிடம் காட்டி அதில் கூறியுள்ள விவரங்களை சுட்டிக்காட்டி அனுமதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்ற காவல்துறையினர் அவர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர். இதையடுத்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்பு மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment