ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்! 14 பேர் பலி! ராணுவ பள்ளியை குறிவைத்து கொடூர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் கார் மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தி 14 பேரை

By manikandan | Published: Aug 08, 2019 12:40 PM

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் கார் மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றுள்ளது. இந்த கோர சம்பவத்தில் 140க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர். ஆப்கானிஸ்தான் காபூல் மேற்கு பகுதியில்  உள்ள, ராணுவ சோதனை சாவடியில் வெடிகுண்டு உள்ள காரை மோத வைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 14 பேர் பலியாகினர். மேலும், 140க்கும் அதிகமானோர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குத்தல் நடந்த இடத்திற்க்கு அருகில் தான் ராணுவ பள்ளி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc