ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!

ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்சில் உள்ள பிரபலமான ஈபிள் டவரில் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று காவல்துறையினருக்கு வந்த தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈபிள் டவரின் கீழே வெடிகுண்டு வைத்துள்ளதாக அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்ட அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.

அந்த வகையில், ஈபிள் டவரில் தீவிர நடவடிக்கைளில் ஈடுபட்டு வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீஸ் தெரிவித்தார். இதன் பின் நேற்று பிற்பகல் முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பு, ஈபிள் கோபுரத்தை ஒரு நாளைக்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.