அத்திவரதர் : மழையில் நனைத்த குழந்தைகளை துவட்டி விட்ட போலீசார் குவியும் பாராட்டுக்கள் !

காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான

By murugan | Published: Aug 09, 2019 01:05 PM

காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து  வருகின்றனர். முதலில் சயன  கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்று கட்சி அளித்து வருகிறார். இதுவரை 70 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 17- ம் தேதி வரை அத்திவரதர் தரிசனம் செய்யலாம் என  அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,  தற்போது ஒரு நாள் முன்னதாகவே தரிசனம் நிறைவடையும் என்று மாவட்ட  ஆட்சியர்  அறிவித்தார். இந்நிலையில் இங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் பக்தர்களுக்கு  உதவும் விதமாக வயதானவர்களை கூட்ட நெரிசலில் இருந்து பாதுகாப்பாக அத்திவரதரை  தரிசனம் செய்ய உதவி வருகின்றனர். சமீபத்தில் காஞ்சிபுரத்தில்  பெய்த மழையில் அத்திவரதரை காண  தரிசன பாதையில் நின்று கொண்டு இருந்த பக்தர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நனைத்தனர். குழந்தைகள் மழையில் நனைவதை பார்த்த  போலீசார் உடனடியாக மழையில் நனைத்த குழந்தைகளை அன்போடு தூக்கி மழைநீரை துவட்டி விட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பலர் தங்களது   வாழ்த்துக்களை காவல்துறைக்கு கூறி வருகின்றனர். வீடியோ இதோ ... [video width="208" height="400" mp4="https://dinasuvadu.com/wp-content/uploads/2019/08/getfvid_69004555_2440911295965937_7200247504758112256_n.mp4"][/video]
Step2: Place in ads Display sections

unicc