புதினாவின் நன்மைகளும் பக்க விளைவுகளும்.!

புதினாவின் நன்மைகளும் பக்க விளைவுகளும்.!

புதினா பற்றிய குறிப்பு :

புதினா இலையை நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி இருப்போம்.ஏனெனில் புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதை பயன்படுத்துவதால் பல பக்கவிளைவுகளும் உள்ளன.

அந்த வகையில் புதினா எண்ணெய்யை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகளும் என்னென்ன பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.

புதினாவின் நன்மைகள் :

  • புதினா எண்ணெயை பயன்படுத்துவதால் குடலில் உள்ள அசுத்தங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.சிகிச்சையின் போது குடல் தசைகளை சுருக்க உதவுகிறது.இதனால் தசையில் ஏற்படும் பிடிப்புகள் குறைகின்றன.
  • ஒற்றை தலைவலி அடிக்கடி ஏற்படுபவர்கள் புதினா இலையை அரைத்து நெற்றியில் தடவினால் சிறிது நேரத்தில் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
  • புதினா எண்ணெய்யை கன்னம் தாடை பகுதியில் தடவுவதால் அதில் உள்ள நரம்புகளை ஓய்வெடுக்க செய்து தலைவலியை குறைக்கிறது.புதினா எண்ணெய்யின் நறுமணம் மனதிற்கு அமைதியை தருவதால் மன அழுத்தம் குறைகிறது.
  • புதினா இலையின் நறுமணம் வாய் துர்நாற்றத்தை போக்க பெரிதும் உதவுகிறது.புதினா இலையில் டீ போட்டு குடிப்பதால் பெண்கள் மாதவிடாய் கால வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

பக்க விளைவுகள் :

  • குடலிறக்கம்,கல்லீரல் பாதிப்பு ,பித்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் புதினா மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது.ஏனெனில் இந்த மாத்திரை கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
  • புதினா எண்ணெய்யை குழந்தைகளுக்கு எக்காரணத்தாலும் பயன்படுத்த கூடாது.இதை பயன்படுத்துவதால் வேறு சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
  • சருமத்தில் இந்த எண்ணெய்யை பயன்படுத்தும் போது பாதாம் அல்லது ஜோஜோபா எண்ணெய் போன்ற கேரியர் எண்ணையை சேர்த்து மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் முகத்தில் எரிச்சல் சருமம் சிவத்தல் போன்ற பிரச்சனை ஏற்படலாம்.
  • புதினா எண்ணெய்யை ஒரு போதும் குடிக்க கூடாது.ஏனெனில் இதன் அடர்த்தி அதிகம் என்பதால் அது உடலுக்கு நஞ்சாகி வாய்ப்புள்ளது.
Join our channel google news Youtube