28-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு

வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெறும்  என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை  வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை  ராயப்பேட்டையில்  தலைமை அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் . முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.