குடும்பத்தோடு கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர்!? நீதிமன்றத்தில் முறையிட்ட கணவர்!

  • திருத்தணி அருகே மத்தூர் ஊராட்சியில் 2வது வார்டில் அதிமுக சார்பில் பூங்கொடி என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
  • இவர் மற்றும், இவரது நான்கு மாத குழந்தை, இவரது தாய் வசந்தி ஆகியோரை காணவில்லை என காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.  

திருத்தணி அருகே உள்ள மத்தூர் எனும் ஊரில் உள்ள 2 வது வார்டில் நடைபெற்ற தேர்தலில் பூங்கொடி எனபவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவரது கணவர் கோட்டி திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

கோட்டி – பூங்கொடி தம்பதிக்கு நிஷாந்த் என்கிற 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பூங்கொடி, நிஷாந்த், பூங்கொடி தயார் வசந்தி ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தனர். அது தொடர்பாக கடந்த 10ஆம் தேதி கோட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அவர்கள் தேடி தற்போது வரை கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் பூங்கொடியை காணவில்லை என ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார். மேலும், திருத்தணி பைபாஸ் சாலையில் வசித்து வரும் ஜோதி நாயுடு என்பவர் தான் கடத்தியுள்ளதாக சந்தேகம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.