முழு நேர நடிகராகிவிட்டாரா ‘AAA’ பட இயக்குனர்?!

  • த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன்
  • அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும், அருள்நிதியின் புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடல்ட் காமேடி படமாக வெளியாகி வசூலை குவித்த திரைப்படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன். அந்த படத்தை தொடர்ந்து சிம்புவை கதாநாயகனாக வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் படம் படுதோல்வி அடைந்தது. இந்த படம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. அதற்கடுத்து படங்களை இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தார். மேலும் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை, அருள் நிதி கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய ரோலிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சில இயக்குனர்கள் முழு நேர நடிகராவது போல இவரும் முழு நேர நடிகராகிவிட்டாரா என்பது தெரியவில்லை.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment