அடேங்கப்பா .. நெத்திலி மீன்ல இவ்வளவு நன்மைகளா..?

நெத்திலி மீனை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகவும்Anchovy

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியவை மீன்கள் தான், மீன்கள் நம் உடலில் அதிகளவு சத்துக்கள் கொடுக்கிறது, மேலும் பார்வையை கூர்மையாக்குகிறது. இந்நிலையில் நெத்திலி மீன் சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

நெத்திலி மீனில் ஊட்டச்சத்து அதிகளவில் காணப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறை நெத்திலி மீன் சாப்பிட்டு வந்தால், உடலில் நிறைந்திருக்கும் கேட்ட கொழுப்புகள் குறையும், மேலும் இதய நோய் இருபவர்கள் நெத்திலி மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோயை குணப்படுத்தும்.

நெத்திலி மீனில் ப்ரோட்டின், வைட்டமின் E , வைட்டமின் A போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கிறது, 20கிராம் நெத்திலி மீனில் நமக்கு 2 நாட்கள் தேவையான மெக்னீசியம் இருக்கிறது, மேலும் நெத்திலி மீனில் 5% பாஸ்பிரஸ் உள்ளது.

மேலும் நெத்திலி மீனை சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகவும், மேலும் உடல் செல்லுக்கு முக்கிய தேவையான அயன் சத்து நெத்திலி மீனில் அதிகளவு இருக்கிறது இதனால் உங்களது இரத்தம் சுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நெத்திலி மீனை குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவுத்திறனை அதிகப்படுத்தும், மேலும் பார்வைத்திறன் அதிகமாகும்,

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.