96 பட ஜானுவாக நடிகை சமந்தா! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா?

By leena | Published: Oct 14, 2019 09:05 AM

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா? என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இதனை இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகை சமந்தா இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து, ஜானுவாக நடித்ததை புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போதுசமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc