நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்துள்ளாரா? விளக்கமளிக்கும் கீர்த்தி சுரேஷின் தாயார்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீப காலமாக சில திரையுலக பிரபலங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜக கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து கீர்த்தி சுரேஷின் தாயார் விளக்கமளித்துள்ளார். அவரது தாயார் மேனகா அவர்கள் கூறுகையில், ” எனது கணவர் சுரேஷ் பாஜகவின் உறுப்பினர். ஆனால், நானோ, கீர்த்தி சுரேஷோ இதுவரை எந்த காட்சியிலும் உறுப்பினர் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கீர்த்தி  சுரேசுக்கு அரசியலில் ஆர்வமும் இல்லை. அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment