சண்டைக்கு தயாராகும் தளபதி 64 நடிகை

நடிகர் தளபதி விஜயின் 64வது  படத்தின் படபிடிப்புகள் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த  திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகை  மாளவிகா மோகன் மற்றும் ஆன்ட்ரியா , சாந்தனு  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியாவிற்கு படத்தில் சண்டைக்காட்சிகள் இருப்பதால் அவர் சண்டை  பயிற்சியில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு இந்த சண்டைக்காட்சி நல்ல வரவேற்பை கொடுக்கும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.