பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கிவரும் நடிகர்கள்!

பொதுவாக திரையுலக நடிகர்கள் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களிடமுள்ள

By Rebekal | Published: Mar 24, 2020 04:30 PM

பொதுவாக திரையுலக நடிகர்கள் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களிடமுள்ள பணத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்குவது தற்போது சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தங்களது வேலைகளை இழந்து, வேலைக்கு செல்ல முடியாமல் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக தற்போது திரையுலக நடிகர்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இயக்குனர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்கள் ஆகிய சூர்யா கார்த்தி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி நிதி உதவி வழங்கி உள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவியை FEFSI  ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். தற்பொழுதும் நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் உதவிப் பணத்தை மூடப்பட்ட  FEFSI நிறுவன ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். இவர்களின் இந்த செயல்பாட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

Step2: Place in ads Display sections

unicc