என் துயருக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி - நடிகர் விவேக் ட்விட்!

"என் துயருக்கு இரங்கல் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி" என்று கூறி ட்விட்டரில்

By dinesh | Published: Jul 18, 2019 05:44 PM

"என் துயருக்கு இரங்கல் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி" என்று கூறி ட்விட்டரில் நடிகர் விவேக் அவர்கள் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். திரையுலகத்தில் முன்னணி நடிகராகவும் சமூக செயல்பாடுகளிலில் முன்னின்று இருக்கும் நடிகர் விவேக் அவர்களின் தயார் மணியம்மாள் (89) அவர்கள் நேற்று காலமானார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சங்கரன்கோவில் அருகே கிராமத்தில் இறுதி நிகழ்வுகள் நடந்தது. அவர் தம் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , கவிப்பேரரசு வைரமுத்து , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்னும் பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் தொலைபேசி வாயிலாக இரங்கல் கூறினார்கள். இரங்கல் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc