அரசுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்த பிரபல நடிகர்!

நகைசுவை நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில்

By leena | Published: Sep 09, 2019 03:47 PM

நகைசுவை நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல், சமூகத்தின் மீதும், இயற்கை வளங்களின் மீது அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார். நடிகர் விவேக்கை பொறுத்தவரையில், மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை மாநகராட்சி, மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை பாராட்டும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'சென்னை மாநகராட்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும். இருக்கும் அரசு மரங்களை பாதுகாப்பதற்கும் இனி புதிதாக மரம் நடுவதற்கும் வாழ்த்துக்கள். மாநகராட்சி கமிஷனர் திரு.G.பிரகாஷ் IAS அவர்களுக்கு என் இதய பூர்வ நன்றி' என பதிவிட்டுள்ளார். 
Step2: Place in ads Display sections

unicc