தண்ணீர் தட்டுப்பாடு -நீர் நிலைகளை தூர்வார அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினி

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் 24 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அதனை சேமித்து வைக்க ஏரி குளங்கள் ,மற்றும் அணைகளை தூர் வாரமால் உள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஏரி -குளம் அவற்றிக்கு கால்வாய் அமைப்புகள் முற்றிலுமாக இல்லாததால் நீரை சேமிப்பது மற்றும் நீரை  கடத்துவது  கடும் சவாலாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
Image result for ரஜினி ரசிகர் மன்றம் தண்ணீர்
இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற பின் சென்னை திரும்பினார்.செய்தியாளர் சந்தித்த தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பேசினார்.அதில்  நடிகர் ரஜினிகாநத் தமிழக அரசு உடனடியாக மழை நீரை சேமிக்க வேண்டும்நீர்நிலைகளை தூர்வார வேண்டும்.மேலும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
Image result for ரஜினி ரசிகர் மன்றம் தண்ணீர்
இவருடைய ரசிக மன்றத்தின் மூலமாக தண்ணீர் பல இடங்களில் விநியோகம் மற்றும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பேரணி  போன்றவைகளையும்  பொதுமக்களுடன் இணைந்து  நீர் நிலைகளை இந்த மன்றத்தின்  உறுப்பினர்கள் தூர்வாரி வருகின்றனர் இதற்கு அரசி காட்சி தலைவர்கள் பாராட்டியது  குறிப்பிடத்தக்கது.
Image

author avatar
kavitha