ரசிகரின் இழப்பை தாங்க முடியாமல் மீண்டும் கதறி அழுத கார்த்தி!

தமிழ் சினிமாவில் முன்னணி கதயநகர்களாக வலம் வரும் சகோதரர்கள் சூர்யா மற்றும்

By manikandan | Published: Dec 01, 2019 02:39 PM

தமிழ் சினிமாவில் முன்னணி கதயநகர்களாக வலம் வரும் சகோதரர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளவர்க். தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். கார்த்தி நடிப்பில் தம்பி திரைப்படம் அடுத்து வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வருகையில் கார்த்தி சென்னை மக்கள் மன்ற அமைப்பாளர் வியாசை நித்யா என்பவர் விபத்தில் மரணமடைந்தார். இவரது மறைவிற்கு கார்த்தி நேரில் சென்று வியாசை நித்யா அவர்களது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுளளார். அப்போது நித்யாவின் உடலை பார்த்து கார்த்தி கண்ணீர் சிந்தி அழுதுவிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கார்த்தி ரசிகனின் இழப்பிற்கு இப்படி அழுதது மற்ற ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து கார்த்தி கோரிக்கையின் பெயரில் தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் வியாசை நித்யா மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல 2017ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஜீவன் குமார் திருமணமான 2 மாதத்தில் ஓர் கார் விபத்தில் மரணமடைந்தார். அப்போது அங்கு சென்ற கார்த்தி இதேபோல அழுதுவிட்டார்.
Step2: Place in ads Display sections

unicc