“அம்மா பேட்ரோல் வாகனம்” பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு!

தமிழகத்தை பொறுத்தவரையில், பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு பல வழிகளில் முயற்சி எடுத்தாலும், குற்றங்கள் குறைந்த பாடில்லை.

இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, சென்னையில், ” அம்மா பேட்ரோல்” என்ற பிங்க் நிற புதிய ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த வாகனத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. இதனையடுத்து, இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அடுத்தவாரம் துவங்கி வைக்க உள்ளார். விரைவில் இந்த வாகனம் தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.