பட்டம் விட்டால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடி.!

பட்டம் விட்டால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடி.!

கோவையில் சிறுவர்கள் பட்டம் விடுவதைக் தவிர்க்க வேண்டும் என்றும், மீறி பட்டம் விட்டால் அவர்களின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் கடந்தசில நாள்களாக பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளது. இவ்வாறு பட்டம் விடுவதால் பட்டம்  அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின் தடை ஏற்படுகிறது என மின்சார வாரிய தரப்பில் இருந்து புகார்கள் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பயணிகள் மீது பட்டத்தின் கயிறு இறுக்கி மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. எனவே சிறுவர்கள், சிறுமிகள் பட்டம்  விடாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். அதையும் மீறி சிறுவர்கள் பட்டம் விட்டால் அவர்களின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube