காதலனின் பாடலை சிறையில் இருந்து கண்ணீரோடு ரசிக்கும் அபிராமி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

By leena | Published: Aug 15, 2019 09:42 AM

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், அபிராமி மற்றும் முகன் இருவரின் காதலுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கலவரங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்தது. இந்நிலையில், முகன் மற்றும் லொஸ்லியா இருவரும் இணைந்து பாடல் பாடுகின்றனர். பலரும் இதனை வரவேற்று கைதட்டுகின்றனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி இதனை கண்ணீரோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்.
Step2: Place in ads Display sections

unicc