பாரம்பரிய இந்திய உடை ! நோபல் பரிசை பெற்ற பிஜித் பானர்ஜீ – எஸ்தர் டூஃப்லோ

  • இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோவிற்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
  • நோபல் பரிசு வழங்கும் விழாவில் அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் இந்தியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்து சென்றுள்ளனர்.  

2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இந்த விருது 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.உலக அளவில் வறுமையை ஒழிப்பதற்கான விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காக அமேரிக்காவின் மைக்கேல் கிரீமர், அபிஜித் பானர்ஜீ மற்றும் எஸ்தர் டூஃப்லோ ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதில் ஒருவரான அபிஜித் பானர்ஜீ , அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.நோபல் பரிசு வாங்கும் பெண்மணியான எஸ்தர் டூஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவி ஆவார்.

இந்த நிலையில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் வென்றவர்களுக்கு நோபல் பரிசு  வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்ற அபிஜித் பானர்ஜியும் அவரது மனைவியும் இந்திய பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர்.அபிஜித் பானர்ஜி வேட்டி மற்றும் குர்த்தாவுடனும்,அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ சாரி அணிந்து பங்கேற்றனர்.பின்னர்  இருவரும் தனித்தனியாக விருதினை பெற்றுக்கொண்டனர்.இந்தியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்து சென்று வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.