சர்ச்சைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை - அபிஜித் பானர்ஜி பேட்டி

சர்ச்சைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று நோபல்

By venu | Published: Oct 23, 2019 09:03 AM

சர்ச்சைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இந்த விருது 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.அதில் ஒருவர் அபிஜித் பானர்ஜீ ஆவார்.இவர் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். நேற்று நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதன் பின்னர் அபிஜித் பானர்ஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்,பிரதமருடன்  நடந்தது ஒரு நல்ல சந்திப்பு.மோடிக்கு எதிரான கருத்துகளை நான் தெரிவித்ததாக ஊடகங்கள் வெளியிட்ட சித்தரிப்புகளை பிரதமர் மோடி நகைச்சுவையாக என்னிடம்  கூறினார்.சர்ச்சைக்குரிய வகையில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்  அபிஜித் பானர்ஜீ.      
Step2: Place in ads Display sections

unicc