ஆவின் பால் 6 ரூபாய் விலையேற்றம்! எந்தெந்த கலர் எவ்வளவு விலை? முழு விவரம் உள்ளே!

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாயாக  உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது .

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்தது .இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

இதனிடையில் நள்ளிரவு முதல் ஆவின் பால் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது .இதனிடையே தயிர் ,மோர் ,நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் .5 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக 2014 ம் ஆண்டு பால் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த விலையேற்றத்தின்படி, பசும்பாலில் கொள்முதல் விலை 28 ரூபாயில் இருந்து,  32 ரூபாயாகவும்,  எருமை பாலின் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து,  41 ரூபாயாகவும் உயர்த்தபட்டுள்ளது.

இதனால் பயனர்களுக்கு ஒரு லிட்டருக்கு 6 ரூபாயும், அரை லிட்டருக்கு 3 ரூபாயும்  உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த வகை பால் எவ்வளவு விலை கீழே பாப்போம்.

நீலம் : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 17 ரூபாயில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 20 ருபாயாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 18 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 21 ரூபாய் 50 காசாக உள்ளது.

பச்சை  : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 19 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 22 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 20 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 23 ரூபாய் 50 காசாக உள்ளது.

ஆரஞ்சு  : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 21 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 24 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 25 ரூபாய் 50 காசாக உள்ளது.

மெஜந்தா  : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 16 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 19 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 17 ரூபாயில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 20 ரூபாயாக உள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.