சந்தானத்தின் ஏ.1 டீசர் வெளியானது! கூடவே படத்திற்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது!

சந்தானத்தின் ஏ.1 டீசர் வெளியானது! கூடவே படத்திற்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது!

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ஏ1 படத்தின் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். தாரா எனும் புதுமுக ஹீரோயின் நடித்துள்ளார்.

வெளியான டீசரில், ‘ ஆப் ஆயில் சாப்பிட்டு தனது காதலை நிரூபிக்கும் ஐயராத்து பெண்.  மயங்கி விழுந்த மாமா’ என வசனங்களை கொண்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் லோக்கல் பையனாகவும், அவரை காதலிக்கும் அய்யர் பெண்ணாக ஹீரோயாகவும் டீசரில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்த இந்து தமிழர் கட்சியினர் சென்னையில் காவல் ஆணையரிடம் படத்திற்கு தடை கேட்டு புகார்  அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘ இந்துக்களில் சிறுபான்மையினராக இருக்கும் பிராமணர்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதமாவும், ஏ1 டீசர் உள்ளது எனவும், மற்ற சாதி பெண்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதமாக யாரும் எடுக்க முடியாது.

அப்படி இருக்க பிராமண மக்களை மட்டும் இப்படி சித்தரித்து இருப்பது கண்டிக்க தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக, சந்தானம்,ஜான்சன் ஆஜியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube