ரூ.45 ஆயிரத்தில் முழு நீள தமிழ் திரைப்படத்தை உருவாக்கி சாதனை படைத்த இளைஞர்!

இன்றைய நிலையில், ஒரு படம் இயக்குவதற்கு பல நூறு கோடிகள் செலவாகிறது. இந்த நிலையில்,

By leena | Published: Sep 11, 2019 12:16 PM

இன்றைய நிலையில், ஒரு படம் இயக்குவதற்கு பல நூறு கோடிகள் செலவாகிறது. இந்த நிலையில், ஒரு இளைஞர் 45 ஆயிரம் செலவில், 1 மணி நேரம் 40 நிமிடம் ஓடக் கூடிய தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை, ரத்தினகுமார் என்ற புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பெயர், 'surveillance zone'. வெறும் ரூ.45 ஆயிரம் செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் சுயாதீன தமிழ்ப்படம் ஆகும். இத்திரைப்படம் ஆகஸ்ட் 16-ம் தேதி டொராண்டோவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்படம் இத்தாலி, பெர்லின், இஸ்ரேல், மியாமி, கொல்கத்தா போன்ற ஊர்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில், ஒரு கதையை CCTV footage மூலம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் இப்படமும் இருக்கும். மேலும் இப்படத்தில் இசை இல்லை. cctv-ல் பதிவு செய்யப்பட்ட ஆடியோ எப்படி கேட்குமோ அதே போல் தான் இதற்கு ஒளி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படம் Canon 550D மற்றும் Gopro கேமராவில் எடுக்கப்பட்டது. மேலும், இப்படத்திற்கு டில்லியில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival-ல் இப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc