ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற பெண்..! பிறகு நடந்த சோகம்..!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்சனா (25). நேற்று முந்தினம்

By murugan | Published: Oct 13, 2019 07:14 AM

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்சனா (25). நேற்று முந்தினம் இரவு பிரசவ வலியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு நேற்று காலை பிரசவம் மூலம் 5 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். அனைத்து குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்தால் அனைவரும் எடை குறைந்து உள்ளனர்.அதில் ஒரு ஆண் குழந்தை இறந்து உள்ளது. மீதமுள்ள 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்  வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து  பெண் மருத்துவர் லதா ராஜோரியா கூறுகையில் , இது மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஒன்பது குழந்தைகள் கூட பிரசவிக்கப்பட்டன," என அவர் கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc