காஷ்மீரில் பிடிபட்ட லாரி!3 தீவிரவாதிகளை  கைது செய்து விசாரணை

காஷ்மீரில் பிடிபட்ட லாரியில் இருந்து 3 தீவிரவாதிகளை  கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Image result for kashmir lorry kathuva

இதனை அடுத்து இன்று ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி சிக்கியது.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த லாரி சுஹில் அகமது என்பவருக்குச் சொந்தமானது என்றும் புல்வாமா பகுதியை சேர்ந்தது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிடிப்பட்ட  லாரியை கத்துவா காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்ற காவல் துறையினர் 3 தீவிரவாதிகளை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.