வடபழனியில் பிரபல உணவகத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த உணவகத்தில் இன்று காலை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் ஒரு டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment