போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் ! பிப்ரவரி – 14 இரவு, கறுப்பு இரவு -மு.க.ஸ்டாலின் கண்டனம்

போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் ! பிப்ரவரி – 14 இரவு, கறுப்பு இரவு -மு.க.ஸ்டாலின் கண்டனம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப்.ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

நேற்று இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பின்பு காவல்த்துறையினர் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ,பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.காவல்துறையின் இந்தச் சதிச்செயல் தமிழகம் முழுவதும் காட்டுத் தீயைப் போலப் பரவி, சென்னை முழுவதும் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பொதுமக்களைச் சாலைக்கு வந்து ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டங்கள் நடத்தும் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. பிப்ரவரி 14ம் நாள் இரவு என்பது ‘கறுப்பு இரவு’ என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டது.

மக்கள் குரலே மகேசன் குரல்” என்பதை உணர்ந்து, மக்களை உரிய முறையில் மதித்து, கண்ணியத்துடன் நடத்தக் கற்றுக் கொண்டு, ஜனநாயகப் போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube