வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவன்..! ஆசிரியைக்கு கத்தி குத்து ..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர்

By murugan | Published: Oct 25, 2019 09:29 AM

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி. இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். இதனால் வீட்டில்  மாணவ மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் படித்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த மாணவன் வீட்டில் தனியாக இருந்த மெர்லினை துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி அதன் பின்னர் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மெர்லின் கூச்சலிட அந்த மாணவன் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு ஓடிவிட்டான். அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் ரத்த காயத்துடன் கிடந்த மெர்லினை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மெர்லின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தலைமறைவான மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். டியூஷன் ஆசிரியை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Step2: Place in ads Display sections

unicc