வீட்டிற்குள் இருந்து வந்த அழுகிய வாடை!உள்ளே சென்று பார்த்தவர் கண்ட காட்சி!

வீட்டிற்குள் இருந்து அழுகிய வாடை வந்ததால் சுந்தரத்தின் உறவினர் உள்ளே

By sulai | Published: Dec 28, 2019 05:12 PM

  • வீட்டிற்குள் இருந்து அழுகிய வாடை வந்ததால் சுந்தரத்தின் உறவினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர் ,அப்போது அழுகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது.
  • இதன் காரணமாக கொலையா?இல்ல தற்கொலையா?என்ற எண்ணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
புதுச்சேரியில் உள்ள பாகூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் ஆவார்.இவர் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார்.இவரது மனைவி சுகந்தி ஆவார்.இவர்களுக்கு இரண்டு ஆண் ஆண்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.இதன் காரணமாக மனைவி சுகந்தி கணவரிடம் சண்டை போட்டு கொண்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். இதன் காரணமாக தனிமையான சண்முகசுந்தரம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்துள்ளார்.ஆனால் ஒரு நாள் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்தவர் வெளியே வரவே இல்லை. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக கீழ் வீட்டில் குடியிருந்த நாகம்மாள் என்பவர் சண்முகசுந்தரத்தின் உறவினருக்கு தகவல் அளித்துள்ளார்.இதன் காரணமாக அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது சண்முகம் வீட்டில் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றியுள்ளனர். பின்னர் பிரேதபரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சம்பவம் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சண்முகசுந்தரத்தின் மரணம் கொலையா ?இல்ல தற்கொலையா?என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc